NARCOTICS INTELLIGENCE BUREAU CID - TAMIL NADU
-
Formation of the Unit and strength as on 01.01.2022
-
NEW INITIATIVES DURING 2021
-
PROPOSED PLAN OF ACTION 2022-2023
- For better Enforcement of the NDPS Act, 1985 training programmes will be organized for NIB CID units.
- Hill areas will be watched for possibility of cultivation of ganja.
- Efforts will be taken to prevent cultivation of ganja plants with the coordination of the Forest department.
- Preventive action will be taken under Tamil Nadu Act 14 of 1982 to curtail the activity of drug peddlers.
- Efforts will be taken to reduce the pendency of petitions.
- Collection and collation of existing information through Crime Records Bureau for better Enforcement of the NDPS Act.
- Efforts will be taken for effective preventive action against habitual drug offenders by identifying such offenders and keeping them under watch.
- Better supervision of NIB CID units including visits and inspections.
- Better supervision of GCR cases by analyzing the forward and backward linkages, Conducting review meetings and giving instructions through memos.
- Supervision and reviewing of UI & PT cases disposal in various courts.
- More efforts will be taken for eradication of drug menace and eradicate selling of narcotic drugs in public places especially around educational institutions by conducting frequent raids.
- Intelligence on the activities of courier agencies will be collected and action will be taken.
- The NDPS Act, 1985 will be enforced effectively in Co-ordination with other enforcing agencies of the Act.
- Joint raids will be organized in the medical shops situated near schools and colleges along with Drug Inspectors.
-
ACHIEVEMENTS FOR THE YEAR 2021 (JAN. TO DEC.)
-
Current status of Hon. CM’s Announcements
-
Announcement No.5
-
Announcement No.6
-
CM Announcement No.7
The NIB CID unit was first formed in Tamil Nadu at Chennai on 17/12/1963. Through Government Orders issued in 1987, 1990, 1994, and 1995 NIB CID units were started in Tiruchirapalli, Madurai, Salem, Dindigul, Theni, Villupuram, Ramanathapuram, Coimbatore, Thoothukudi, Vellore, Nagapattinam, Kancheepuram, Sivagangai, and Kanniyakumari. Now, there are 15 NIB CID units functioning all over the State. The prime duty of NIB CID is to collect intelligence and to take action against persons indulging in criminal activities such as manufacturing, consuming and trafficking of Narcotic Drugs and Psychotropic Substances.
Strength :
The NIB CID which functions under the Home, Prohibition and Excise Department is led by an Additional Director General of Police, Crime and has an Inspector General of Police, Crime (SIT) (head of Anti Narcotic Task Force), a Superintendent of Police, an Additional Superintendent of Police, 12 Deputy Superintendents of Police, 16 Inspectors of Police, 17 Sub-Inspectors of Police and 126 other ranks.
STEPS TAKEN TO STAMP OUT THE SMUGGLING OF NARCOTIC DRUGS FROM OTHER STATES / COUNTRIES IN COORDINATION WITH OTHER NODAL AGENCIES.
CID has close liaison with the Narcotic Control Bureau, which is under the direct control of the Central Government. The Narcotic Control Bureau gives valuable training programmes on Narcotic Drugs and Psychotropic Substance to NIB CID officials working under the State Government. This training programme improves the performance of the NIB CID.
Information with regard to smuggling of Narcotic Drugs and Psychotropic Substances is also being shared between Central and State agencies. Joint raids were organized in medical shops in association with Drug Inspectors. Frequent meetings are being conducted with forest officials regarding collection of intelligence about cultivation of Ganja, Opium or Poppy and Coca plants.
International Day Against Drug Abuse and Illicit Trafficking on 26th June of 2021.
The International Day against Drug Abuse and Illicit Trafficking was observed in Tamil Nadu on 26th June 2021 in a befitting manner, which raised public awareness and acquainted the public with the steps taken by the government against drug abuse and illicit trafficking in Narcotic Drugs and Psychotropic Substances. An Online competition for colleges all over Tamil Nadu was conducted and prizes were distributed to the winners.
Apart from the various Government agencies engaged in the enforcement of the Narcotic Drugs and Psychotropic Substances Act, drug abuse control, de-addiction activities (De-Addiction Centers) voluntary organizations / leading NGOs and Educational institutions also participated in the programmes of the celebration.
Pamphlets were distributed by NIB CID units across Tamil Nadu along with the dailies. Special training courses were conducted to all unit officers to enforce the NDPS Act 1985, effectively. Effective raids were organized near schools and colleges to eradicate the drug menace.
Educational institutions were visited by the NIB CID units for effective implementation of the NDPS Act in the area with a view to keep educational institutions free from the menace.
During the year 2021, the NIB CID units of Tamil Nadu detected 516 cases and arrested 582 accused. 6363.623 kgs. Dry Ganja, 3.03 kgs. of Methamphetamine, and 4.00 kg. of Hashish, all worth Rs.9.79 crore were seized.
During the year 2021, a total of 6 Notorious Drug Offenders were detained under Tamil Nadu Act 14 of 1982.
The Government of Tamil Nadu has sanctioned Rs.25 Lakhs for providing financial assistance for Rehabilitation of drug offenders to prevent them from going back to illegal activities vide G.O(Ms.)No.47, Home, Prohibition and Excise (XVI) Department dated 28.12.2020.
The Government of Tamil Nadu has sanctioned Rs.25 Lakhs for conducting Awareness Campaigns against drug abuse. The GO is awaited from the Government.
The Government of Tamil Nadu has sanctioned Rs.15 Lakhs for special rewards for police personnel and private individuals who play pivotal role in preventing drug trafficking video G.O (Ms.) No.40, Home, Prohibition and Excise (XVI) Department dated 27.10.2020.
Hashish
- On 12.04.2021, NIB CID Thoothukudi unit seized 1 kg. Hashish oil and arrested two accused. The value of property seized is Rs.10 Lakhs.
- On 01.10.2021, NIB CID Thoothukudi unit seized 3 kg. Hashish oil and arrested two accused. The value of property seized is Rs.30 Lakhs.
Methamphetamine
- On 08.01.2021, NIB CID Chennai unit seized 3.03 kg. Methamphetamine, and arrested two accused. The value of property seized is Rs.3.03 crore.
போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு
-
போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு (புலனாய்வு)துறை – உருவாக்கம்
-
புதிய துவக்கவல்ல முயற்சி 2021
-
2022 – 2023 ம் ஆண்டிற்கான நடவடிக்கை முன்மொழிதல்
-
போதைப் பொருள் தடுப்பு சட்ட அமலாக்கம் குறித்து, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினருக்கு பயிற்சி அளித்தல்.
-
அண்டை மாநிலங்களிலிருந்து வரும் அதிக அளவிலான போதைப் பொருள்களைத் தடுக்க தீவிர சோதனைகள் மேற்கொள்ளுதல்.
-
மலை பிரதேசங்களில் கஞ்சா செடி வளர்ப்பை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல்.
-
தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவதை தடுக்க வனத்துறையினருடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
-
போதைப் பொருள் கடத்தும் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு சட்டம் 14 /1982 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
-
மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுதல்.
-
குற்ற பிரிவில் உள்ள ஆவண காப்பகத்தின் மூலம் தகவல்கள் சேகரித்து தகவல்களை தொகுத்து போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல்.
-
வழக்கமான போதைப் பொருள் குற்றவாளிகளை கண்டறிந்து கண்காணித்தல், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் .
-
போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அலகுகளை சிறப்பாக மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தல்.
-
கொடுங்குற்ற வழக்குகளை கலந்தாய்வு கூட்டத்தில் ஆய்வு செய்து குறிப்பாணைகள் மூலம் அறிவுறுத்துதல்.
-
விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க சிறப்பாக மேற்பார்வையிடுதல்.
-
போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினர் மூலம் பொது இடங்களில் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் அருகில் சோதனை செய்து கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுத்தல்.
-
தனியார் கொரியர் நிறுவனங்களை பற்றிய நுண்ணறிவை சேகரித்து சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்துதல்.
-
போதைப் பொருள் மற்றும் மனமயக்க பொருள்கள் சட்டம் 1985 –ஐ பிற போதைப் பொருள் தடுப்பு பிரிவுகளுடன் ஒருகிணைந்து சிறப்பாக செயல்படுதல்.
-
போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் மருந்து ஆய்வளார்களுடன் இணைந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மருந்துக் கடைகளை கூட்டு சோதனைகள் செய்தல்.
-
2021 ம் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) ஆண்டு சாதனைகள்.
-
மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பின் நடப்பு நிலை
-
அறிவிப்பு எண். 5
-
அறிவிப்பு எண்.6
-
அறிவிப்பு எண் 7
போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவானது (குற்ற புலனாய்வு துறை) சென்னையில் 17.12.1963 அன்று ஏற்படுத்தப்பட்டது. 1987, 1990, 1994, மற்றும் 1995 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசு ஆணைகளின் படி திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், தேனி, விழுப்புரம், இராமநாதபுரம், கோயம்புத்தூர், தூத்துக்குடி, வேலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 15 போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அலகுகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. போதைப் மருந்துகள் மற்றும் மனமயக்க பொருட்களை தயாரித்தல், பயன்படுத்துதல், மற்றும் கடத்துதல் ஆகிய குற்ற செயல்களில் ஈடுபடுவர்களை பற்றி நுண்ணறிவு தகவல்ளை சேகரித்தல் மற்றும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை இப்பிரிவின் முக்கிய பணிகள் ஆகும்.
நிர்வாக அமைப்பு
உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவானது காவல் துறை கூடுதல் இயக்குநர் , குற்றம் அவர்களின் தலைமையிலும் , காவல் துறை தலைவர் (ANTF) , அவர்களின் மேற்பார்வையில் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 16 காவல் ஆய்வாளர்கள் , 17 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 126 காவலர்கள் ஆகியோரை கொண்டு மாநில போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு இயங்கி வருகிறது.
பிற மாநில போதைப் பொருள் தடுப்புபிரிவுகளுடன் ஒருங்கிணைந்து பிற மாநிலம் / நாடுகளிலிருந்து போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு நெருங்கிய தொடர்பில் உள்ளது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு மாநில அரசின் கீழ் பணிபுரியும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு போதைப் பொருள் மற்றும் மனமயக்க பொருட்கள் குறித்த மதிப்பு மிக்க பயிற்சிகள் அளித்து வருகின்றது. இந்த பயிற்சிகள் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிரப்பட்டு வருகின்றன. மருந்து ஆய்வாளர்களுடன் இனணந்து மருந்து கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கஞ்சா, அபின், பாப்பி அல்லது கோக்கோ தாவரங்கள் பயிரிடப்படுகின்றனவா என தகவல் சேகரிப்பது தொடர்பாக வன ஆலுவலர்களுடன் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருக்கின்றன.
சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு / கடத்தல் தடுப்பு நாள் 26.06.2021
1987 ஆண்டு டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ம் தேதி போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் என்று அறிவித்தது. முந்தைய ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், போதைப் பொருள் மற்றும் மனமயக்க பொருட்கள் ஆகியவற்றில் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக அனுசரிக்கப்பட்டது. மேலும் இணையவழி வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் போதைப் பொருள் பாதிப்புகள் மற்றும் அதனை தடுத்தல் குறித்து கட்டுரைப் போட்டிகள் மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போதைப் பொருள் மற்றும் மனமயக்க பொருள் சட்டத்தை அமல்படுத்தும் பல்வேறு அரசு நிறுவனங்களைத் தவிர, போதைப் பொருள் மறுவாழ்வு மையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.
தமிழகம் முழுவதும் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினரால் போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், நாளிதழ்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைப் பொருள்களின் விற்பனையை தடுக்க தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கல்வி நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில் போதைப் பொருள் விற்பணையை தடுக்க போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அலகுகள் கல்வி நிறுவனங்களுக்கு சென்று போதைப் பொருள் மற்றும் மனமயக்க சட்டத்தை சீரிய முறையில் அமல்படுத்தி வருகின்றன.
2021 ம் ஆண்டில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு 516 வழக்குகளை கண்டுபிடித்து 582 குற்றவாளிகளை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து 6363.623கி.கி உலர் கஞ்சா, 3.03 கி.கி மெத்தாம்பிட்டமின் மற்றும் 4. கி.கி அசீஸ் ஆகிய போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 9.79 கோடி ஆகும்.
குண்டர்தடுப்புச்சட்டம்.
2021 ம் ஆண்டில் 6 போதைப் மருந்து குற்றவாளிகள் தமிழ்நாடு சட்டம் 14/1982 ன் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக அரசு போதைப் பொருள் குற்றவாளிகள் மீண்டும் அத்தொழிலுக்கு திரும்பாமல் இருக்க அவர்தம் மறுவாழ்விற்கு நிதி உதவியினை மானியமாக வழங்க அரசு ஆணை G.O(Ms.)No.47, Home, Prohibition and Excise (XVI) Department dated 28.12.2020 பிறப்பித்து 25 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக அரசு போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ரூ. 25 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசு ஆணை எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறை பணியாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சிறப்பு வெகுமதிகள் வழங்க அரசு ஆணை G.O(Ms.)No.40, Home, Prohibition and Excise (XVI) Department dated 27.10.2020 பிறப்பித்து 15.00 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.